ரஜினியின் 2.0 படத்தின் பாடல் செம சாதனை

சென்னை:
ரஜினியின் 2.0 படத்தின் பாடல் செம சாதனை படைத்து வருகிறது என்று தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்த இந்த சினிமா ரசிகர்களும் ஒருசேர எதிர்பார்த்திருக்கும் படம் 2.0. பல மாதங்களாக தொழில் நுட்ப பணிகள் காரணமாக இப்படம் தள்ளிப்போனது.

நாளை 29ம் தேதி படம் வெளியாகும் என உறுதியாகிவிட்ட நிலையில் முன்பதிவு பல இடங்களில் துரிதமாக நடைபெற்று வருகிறது. பல முக்கிய திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் முற்றிலுமாக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் எந்திர லோகத்து சுந்தரியே வீடியோ பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. இணையதளத்தில் வெளியான அப்பாடல் தற்போது 6 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

மேலும் Youtube ல் #2 ON TRENDING ல் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!