ரஜினியை இயக்க ஆசை… சொன்னது இயக்குனர் ராஜமௌலி

சென்னை:
எனக்கு ரஜினியை இயக்க ஆசை என்று இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

பாகுபலி என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. ரூ. 2000 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய முதல் தென்னிந்திய படம் என்கிற சாதனையை பாகுபலி செய்துள்ளது.

இந்நிலையில் ராஜமௌலி சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரிடம் தமிழ் சினிமாவில் ரஜினி அல்லது கமல் – யாரை இயக்க ஆசை? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “ரஜினி” என தான் பதில் கூறியுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!