ரஜினி உடல்நிலை வதந்தி… முற்றுப்புள்ளி வைப்பு

சென்னை:
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை… மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வந்த தகவல்கள் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு 67 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 2.0 படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் அவரது உடல்நிலை பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுவதும் வாடிக்கையாகிவிட்டது. இயக்குனர் ஷங்கர் அளித்திருந்த ஒரு பேட்டியில் ரஜினி காலில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக எப்போதோ நடந்த சம்பவம் பற்றி கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இது பற்றி ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. “ரஜினிகாந்த் நலமாக உள்ளார்; அவரது உடல்நிலை பற்றி வெளியாகும் தகவல்கள் தவறானவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!