ரஜினி கேட்கும் சம்பளத்தால் பட அறிவிப்பு தாமதமா?

சென்னை:
சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் தயங்குவதால்தான் ரஜினி – முருகதாஸ் படத்தின் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்திற்கு பின்னர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதை இயக்குனரே சமீபத்தில் நடந்த விருது விழாவில் உறுதியாக அறிவித்தார்.

இதுவரை ஒருபடம் முடியும் முன்பே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு வரும் ரஜினி தற்போது முருகதாஸ் படம் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அது தாமதமாக காரணம் ரஜினி கேட்கும் மிகப்பெரிய சம்பளம் தான் என கூறப்படுகிறது .

2.0 படமும் அதிக லாபம் தமிழ்நாட்டில் ஈட்டவில்லை, பேட்ட படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் ரஜினி கேட்கும் மிகப்பெரிய சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர் தயங்குவதாக கூறப்படுகிறது.

அதனால் தான் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்று செய்திகள் உலா வருகிறது. இதற்கு ரஜினியோ, முருகதாஸேதான் உண்மையை சொல்லணும் என்கின்றனர் ரசிகர்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!