ரஜினி டிவி சேனல் தொடங்க உள்ளாரா? கோலிவுட் பரபரக்குது!!!

சென்னை:
ரஜினி டிவி சேனல் ஆரம்பிக்க உள்ளார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் டிவி சேனல் தொடங்க விண்ணப்பித்துள்ளார் என்ற தகவல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இது தொடர்பாக விண்ணப்பித்துள்ளதாக  தெரிகிறது.

அந்த விண்ணப்பத்தில் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்ய பிரகாஷ் அனுமதி கேட்டுள்ளதாக ஒரு கடிதம், சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. தடையில்லா சான்றிதழ் டிரேட் மார்க் பதிவாளர் அலுவலகத்திற்கு ரஜினிகாந்த் தனது கையொப்பமிட்டு அனுப்பியுள்ள தடையில்லா சான்றிதழ் கடிதத்தை போன்ற ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

இந்த பெயர்களில் டிவி சேனல் தொடங்க தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளதை போல அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மூத்த ஊடகவியலாளர், இந்த டிவியில் எடிட்டராக பணியில் சேருகிறார் என்றும் வதந்தி பரவி வருகிறது.

ஆனால் இதெல்லாம் போலியான தகவல் என்கிறார்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள். பொதுவாக சேனலுக்கு விண்ணப்பித்தால் அனுமதி கிடைத்து சேனல் தொடங்க 12 மாதங்கள் ஆகும். ஆனால் ரஜினி பாஜ தலைவர்களிடம் உள்ள செல்வாக்கை வைத்து, அதைவிட விரைவில் டிவி சேனலை தொடங்கி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!