ரஜினி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

சென்னை:
ரஜினி நடித்து செம மாஸ் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்கில்தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் சிவகார்த்திகேயனோடு நயன்தாரா மீண்டும் ஜோடி சேரும் படம்தான். இந்த படத்தை ராஜேஷ் இயக்கி வருகிறார்.

ராஜேஷ் எப்போதும் காமெடியாக படம் எடுப்பவர் என்பதால் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ள  ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் ரஜினி நடித்து சூப்பர்ஹிட் ஆன மன்னன் படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரபூர்வ ரீமேக்கா இல்லை கதை கரு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை படக்குழு தான் சொல்லணும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!