ரஜினி படம்தான்… மாஸ்…. தியேட்டர் நிர்வாகம் எடுத்த முடிவு

சென்னை:
புதிய படங்கள் வந்தாலும் ரஜினியின் 2.0 படம் வரவேற்பை பெற்று வருகிறது என்று தெரிய வந்துள்ளது.

ரஜினியின் 2.0 படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியானது. ரூ. 600 கோடி பட்ஜெட் என கூறப்படும் இப்படம் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது.

சீனாவிலும் அடுத்த வருடம் வெளியாகிறது, அங்கு இதுபோன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு என கூறப்படுகிறது. இந்நிலையில் மாரி 2, அடங்கமறு, கனா, சிலுக்குவார் பட்டி சிங்கம், சீதக்காதி என பல படங்கள் வெளியானது.

ஆனால் இந்த படங்களை தாண்டி ரஜினியின் 2.0 படத்திற்கு தான் அதிக ரசிகர்கள் விரும்புகிறார்களாம். இதனால் மெயின் திரையரங்கில் 2.0 படம் திரையிட இருப்பதாக ரோஹிணி திரையரங்க உரிமையாளர் டுவிட் செய்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!