ரஜினி, விஜய், அஜித் ஆகிய மூன்று பேரின் படங்கள் பற்றிய அறிவிப்புகள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்று முக்கிய நாள் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினி, விஜய், அஜித் ஆகிய மூன்று பேரின் படங்கள் பற்றிய அறிவிப்புகள் இன்று வெளியாகின, வெளியாக இருக்கின்றன.

சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 63வது படம் பற்றிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகின்றன. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ரஜினி நடித்து வரும் பேட்ட படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இவற்றுடன் விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 59-வது படம் பற்றிய அறிவிப்பும் இன்று மாலை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆக ஒரேநாளில் முன்னணி நடிகர்களின் படங்களின் அறிவிப்பால் அந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்து டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர். தற்போது இந்த மூன்று நடிகர்களும் டுவிட்டரில் டிரெண்ட்டிங்கில் உள்ளனர்.

Sharing is caring!