ரன்பீர் கபூர், அலியா பட் காதல் உறுதி

ஹிந்தித் திரையுலகில் இப்போது காதல் கல்யாண சீசன். தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் அடுத்த மாதமும், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம் டிசம்பர் மாதமும் நடக்க உள்ளன. ஏற்கெனவே, பாலிவுட்டில் பல காதல் கதைகள், காதல் திருமணங்கள், காதல் முறிவுகள் நடந்தேறியுள்ளன. இருந்தாலும் காதல் திருமணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

பாலிவுட்டின் அடுத்த காதல் ஜோடியாக கிசுகிசுக்கப்பட்ட ரன்பீர் கபூர், அலியா பட் காதல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அலியா பட் அவருடைய காதலை உறுதி செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலியான தீபிகா படுகோனேவும் கலந்து கொண்டார். அவரிடம் இந்தக் காதல் குறித்து கேட்டதற்கு, அது பற்றி பிரச்சினையில்லை, நான் பழையனவற்றை நினைத்துக் கொண்டிருக்க மாட்டேன். அதிலிருந்து நகர்ந்துவிடுவேன், என்று கூறியிருக்கிறார்.

ரன்பீர் கபூர், இதற்கு முன் தீபிகா படுகோனே, காத்ரினா கைப் ஆகியோரைக் காதலித்து கைவிட்டவர். அலியா பட்டையாவது அவர் கல்யாணம் செய்து கொள்வாரா என்றுதான் பாலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள்.

Sharing is caring!