ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடி திருமணம் விரைவில்…

பொலிவூட் நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடி, தங்களது திருமணம் எதிர்வரும் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமது திருமணப் பத்திரிகையை சமூக வலைத்தளங்களில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ள அவர்கள், திருமணம் நடைபெறும் இடம் குறித்து அறிவிக்கவில்லை.

குறித்த திருமண அழைப்பிதழில், எங்களது திருமணம் எதிர்வரும் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெற இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை குடும்பத்தினரின் ஆசிகளுடன் அறிவிக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Sharing is caring!