ரம்பாவுக்கு 3-வது ஆண் குழந்தை

உள்ளத்தை அள்ளித்தா மூலம் அறிமுகமான ரம்பா தென்னிந்திய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் வசிக்கும் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார். இந்த தம்பதிகளுக்கு லாவண்யா, சாஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்தியா திரும்பிய ரம்பா, மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சித்தார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திடீரென மனம் மாறிய ரம்பா, கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டு இணைந்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் ரம்பா. சமீபத்தில் தனது வளைகாப்பு நிகழ்ச்சியை பெரியதாக நடத்தினார். தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கணவர் இந்திரகுமார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Sharing is caring!