ரவுடி பேபி…கொலை வெறி சாதனையை முறியடித்தது

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான மாரி 2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் கொலவெறி பாடலின் சாதனைகளை முறியடித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாரி 2. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த படத்தின் ரவுடி பேபி பாடல் இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. குறிப்பாக டிக்டாக்கில் இந்த பாடலுக்கு நடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த பாடல் யூடியூப்பில் கொலவெறி வீடியோவின் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் 175 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் தமிழ் பாடல் மற்றும் முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Sharing is caring!