ரவுடி பேபி பாடல் மேக்கிங் வீடியோ

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான மாரி 2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் உருவான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாரி 2. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த படத்தின் ரவுடி பேபி பாடல் இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. குறிப்பாக டிக்டாக்கில் இந்த பாடலுக்கு நடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த பாடலின் வீடியோ யூடியூப்பில் 300 மில்லியன் பார்வைகளை கடந்து ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் பாடல் உருவானது குறித்து படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் நடிகை சாய் பல்லவி பேசுகின்றனர்.

Sharing is caring!