ரஹ்மானால் சினிமா வாய்ப்பு

ஷங்கர் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான படம் காதலன். பிரபுதேவா, நக்மா நடித்திருந்த இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தில் இடம்பெற்ற என்னவளே அடி என்னவளே என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது.

இப்பாட்டை ஆந்திராவைச்சேர்ந்த பேபி என்ற நடுத்தர வயது பெண் ஒருவர், தெலுங்கு மொழியில் இனிமையாக பாடினார். அந்த வீடியோ, ரஹ்மானின் கவனத்துக்கு வந்து, தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். அந்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்தன. சில மணி நேரங்களில் அந்த வீடியோவை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்ததோடு, அந்த பெண்ணுக்கு பாட வாய்ப்பு தரும்படி கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கு இசையமைப்பாளர் கோடேஸ்வரராவ், தான் இசையமைக்கும் படம் ஒன்றில் பாட வாய்ப்பு தந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவரும் கமலின் உன்னை காணாத பாடலை பாடி, பாடகர் சங்கர் மகாதேவனால் கவனம் பெற்று, கமலை சந்திக்கும் வாய்ப்பு பெற்றதோடு, படம் ஒன்றில் பாட வாய்ப்பும் பெற்றார்.

Sharing is caring!