ராஜமௌலியின் மகன் திருமணத்தில் டான்ஸ் ஆடிய பிரபாஸ்

ஐதராபாத்:
ராஜமௌலியின் மகன் திருமணத்தில் பிரபாஸ் நடனமாடிய வீடியோதான் தற்போது செம வைரலாகி வருகிறது.

நடிகர் பிரபாஸ் இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் நடித்த பாகுபலி இரண்டு பாகங்களும் மிகப்பெரிய ஹிட். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இந்த படத்தில் அவர்கள் ஒன்றாக பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் ராஜமௌலியின் மகன் திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு தென்னிந்திய பிரபலங்கள் பலரும் சென்றுள்ளனர். விழாவில் நடிகர் பிரபாஸ் அனைவருடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!