ராஜினாமா செய்கிறேன்…. ராஜினாமா இயக்குனர் பாக்யராஜ் அதிரடி

சென்னை:
ராஜினாமா… ராஜினாமா என்று அதிரடித்துள்ளார் இயக்குனர் பாக்யராஜ். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படம் பல பிரச்னைகளை கடந்து வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. கதை திருட்டு விவகாரம் தான் பெரிய பிரச்னையானது.

இதனால் படம் குறித்த நேரத்தில் திரையிடப்படுமா என்ற சந்தேகமே எழுந்தது. இந்த பிரச்னை இவ்வளவு தீவிரமடைய ஒரே காரணம் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ்.

மற்ற யார் சொல்லியிருந்தாலும் ரசிகர்கள் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு வழியாக இப்பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்தது. இதன் காரணமாகவோ என்னவோ பாக்யராஜ் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது கோலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் பாக்யராஜின் இந்த ராஜினாமாவை எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுத்துள்ளது. சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பாக்யராஜிடம் நீங்களே இந்த பதவியில் நீடிக்க விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளனராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!