ராஜ பீமா படத்தின் படப்பிப்பு நிறைவு… படக்குழு தகவல்

சென்னை:
நடிகர் ஆரவ் நடித்து வரும் ராஜ பீமா படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் நாயகனாக நடிக்கும் `ராஜ பீமா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுவமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆரவ் நாயகனாக நடிக்கும் நடிக்கும் படம் `ராஜ பீமா’. நரேஷ் சம்பத் இயக்கும் இந்த படத்தில் ஆரவ் ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஓவியா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். படத்தில் யானைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித, விலங்கு முரணை பேசும் படமாக உருவாகியிருக்கிறது.

படம் குறித்து இயக்குநர் நரேஷ் சம்பத் பேசும் போது,

“பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது.

குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருக்கிறோம் ” என்றார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!