ராஞ்சனா பார்ட் 2… உயிர்த்து வந்து வரும் தனுஷ்..!

சென்னை:
இந்தி படமான ராஞ்சனா பார்ட் 2 எடுக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தை தயாரித்திருந்தார். தயாரித்திருந்தார் நடிகர் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் வடசென்னை.

மேலும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் தனுஷ் உள்ளார். ஏற்கனவே அவர் ராஞ்சனா, ஷமிதாப் என இந்தி படங்களில் நடித்திருந்தார்.

இதில் ராஞ்சனா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கடைசியாக அவர் உயிர்த்தெழுவேன் என சொல்லி இறப்பது போல கதை அமைந்திருந்தது. தற்போது இப்படத்தை இரண்டாம் பாகத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கவுள்ளார். இதில் தனுஷ் மீண்டும் உயிர்த்து வந்து அரசியல்வாதியாக மாறுவார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!