ராட்சசனை தேடி விஷ்ணு விஷால்

முண்டாசுப்பட்டி எனும் வித்தியாசமான படத்தை கொடுத்த இயக்குநர் ராம்குமார், மீண்டும் விஷ்ணு விஷாலை கொண்டு இயக்கி உள்ள படம் ராட்சசன். அமலாபால் ஹீரோயின். ராதாரவி, முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட் பலர் நடித்துள்ளனர். இசை ஜிப்ரான்.

இப்படத்தின் டீசரை தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்து மர்ம கொலைகள் நடக்கின்றன. அந்த கொலைகளை செய்யும் உருவம் தெரியாத ராட்சசனை, தேடி அலையும் போலீஸாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகி உள்ள ராட்சசன் படம் அக்., 5-ம் தேதி ரிலீஸாகிறது.

Sharing is caring!