ராதாரவி விஷாலை குற்றம் சாட்டி குறைசொல்வதை குறைத்துக் கொண்டார்.

நடிகர் சங்க தேர்தலுக்கு முன்பிருந்தே ராதாரவிக்கும், விஷாலுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது கண்கூடான விஷயம். தேர்தலில் விஷால் அணி வெற்றிபெற்ற பின்னர் ஆரம்பத்தில் விஷாலை குறை சொல்லி வந்த ராதாரவி, போகப்போக அப்படி குற்றம் சாட்டி குறைசொல்வதை குறைத்துக் கொண்டார்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் ‘மீ டூ’ விவகாரம் குறித்து விஷால் பேசுகையில், பாலியல் தொந்தரவுக்கு ஆளாபவர்கள் உடனுக்குடன் நடிகர் சங்கத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கான அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் குறித்து கூறினால் உடனுக்குடன் நடவடிக்கை வசதியாக இருக்கும் என கூறினார்.

நேற்று முன் தினம் அவதார வேட்டை பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, மீ டூ மூலம் திரையுலகில் குழப்பம் ஏற்படுத்துவர்களை விளாசியதுடன், இந்த விஷயத்தில் நடிகர் விஷால் சொன்னது தான் சரி, சம்பந்தப்பட்டவர்கள் அப்போதே புகார் அளிக்க வேண்டுமே தவிர, இத்தனை வருடங்கள் தாமதித்து இப்படி குற்றம் சுமத்துவது தவறு” என கூறி விஷாலின் அணுகுமுறையை பாராட்டியுள்ளார்.

Sharing is caring!