ராதிகாவிற்காக சன் டிவி செய்து கொடுத்த சிறப்பு சலுகை

சென்னை:
நடிகை ராதிகாவிற்காக சிறப்பு சலுகை செய்துள்ளது சன் டி.வி.

சன் டிவியில் பல வருடங்களாக இரவு 9.30 மணி நேர சிலாட்டை ராதிகாவே குத்தகைக்கு எடுத்தது போல் வைத்துள்ளார். ராதிகாவின் சீரியல்கள் அனைத்தும்  இரவு 9.30  முதல் 10 மணி வரை ஒளிபரப்பு ஆகிறது.

தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம்  ராதிகா சரத்குமார் பல சீரியல் தயாரித்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த வாணி ராணி சீரியல் முடிந்து விட்டது. உடனே அடுத்த சீரியலுக்கு தயாராகிவிட்டார் ராதிகா.

சந்திரமுகி என்ற பெயரில் புதிய சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த சீரியலுக்கான புரொமோக்கள் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. முதன்முறையாக இந்த சீரியலின் அறிமுகத்திற்காக 1 மணி நேரம் ஒளிபரப்ப உள்ளார்கள்.

சன் டிவி,  ஒரு சீரியலுக்காக 1 மணிநேரம் கொடுப்பது இதுவே முதன்முறை. இத்தகவலை டுவிட்டரில் ராதிகாவே பதிவு செய்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!