ராம்சரணின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1250 கோடி?

ஐதராபாத்:
தெலுங்கு நடிகர் ராமசரணின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1250 கோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண். பிறக்கும் போதே செல்வாக்குடன் பிறந்தவர். இவரின் தந்தை தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.

சிறுத்தை படம் மூலம் 2007 ல் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து தற்போது அதிக சம்பளம் பெறும் ஹீரோக்களில் ஒருவர். தற்போது வருடத்திற்கு ரூ.20 கோடி சம்பாதிக்கிறாராம். இந்நிலையில் அவரின் மொத்த சொத்தின் மதிப்பு ரூ 1250 கோடி என்ற சொல்லப்படுகிறது.

இவரின் மனைவி பிரபல தனியார் மருத்துவமனையின் சேர்மனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!