ரீ என்ட்ரி கொடுக்கிறார்… தனுசுடன் ஜோடியாகிறார் லட்சுமிமேனன்?

சென்னை:
வர்றாரு… வர்றாரு… மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தனுசுக்கு ஜோடியாக நடிக்க வர்றாரு லட்சுமி மேனன் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகை லட்சுமி மேனன் கடைசியாக விஜய் சேதுபதியின் றெக்க படத்தில் நடித்திருந்தார். இதற்கு பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குனர் ராம்குமார் அடுத்து இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தான் லட்சுமி மேனன் நடிக்கவுள்ளார். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று சொல்றாங்க.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!