ரூ.550 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாய் 3டி முறையில் 2.0.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு படம் 2.0. லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி உள்ள இப்படம், ரூ.550 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாய் 3டி முறையில் உருவாகி உள்ளது.

நவ., 29-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் வெளியான நிலையில், தற்போது 2.0 வில்லன் அக்சய் குமார் உருவான விதம் பற்றிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 54 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் அக்சய் குமாரின் தோற்றத்திற்காக மிகுந்த மெனக்கெட்டுள்ளார்.

2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசும் போது, என் சினிமா வாழ்நாளில் போட்ட மொத்த மேக்கப்பையும் இந்த ஒரு படத்திற்காக போட்டேன் என அக்சய் சொல்லியிருந்தார். தற்போது இந்த வீடியோவை பார்க்கும் போது அது உண்மை என எண்ண தோன்றுகிறது. அந்தளவுக்கு மிகுந்த சிரமத்திற்கிடையே மேக்கப் போட்டுள்ளார் அக்சய்.

Sharing is caring!