ரொபின் ரிஹானா பென்டி அரசாங்கத்தால் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்

பிரபல பொப் பாடகியும் நடிகையும் வடிவமைப்பாளருமான ரொபின் ரிஹானா பென்டி (Robyn Rihanna Fenty), பார்படோஸ் அரசாங்கத்தால் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிஹானாவுக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த பதவியில் கல்வி, சுற்றுலா மற்றும் முதலீடு ஆகிய விடயங்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகின்றது.

இந்தநிலையில், மனிதநேய நடவடிக்கைகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் பாடகி ரிஹானா கவனம் செலுத்துவதாகவும் அந்நாட்டுப் பிரதமர் மியா அமோர் மோட்லி குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!