லிப் கிஸ் காட்சியின் நடித்தது ஏன்?: சுந்தர் சி விளக்கம்

காமெடி நடிகர் விடிவி.கணேஷ் தயாரிப்பில் வி.இசட்.துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர்.சி நாயகனாக நடிக்க, புதுமுகம், ஷாக்ஷி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார்.

விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 6ந் தேதி வெளிவருகிறது.

இந்த படத்தில் சுந்தர்.சி சாக்ஷி சவுத்ரியுடன் லிப்-லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறியதாவது

நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விசயங்கள் இருக்கும். நான் ரசிக்கிற படங்கள் வேறு மாதிரி இருக்கும். முழுக்க பயப்படுற மாதிரி ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது இயக்குநராக யாரை போடலாம் எனப் பேசினோம். வி. இசட். துரை சாரை சொன்னபோது முதலில் பயந்தேன்.

அவர் படங்கள் பார்த்து அவர் வயலண்டாகா இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு அப்பாவி. பேய்ப்படம் பண்ண மாட்டேன் என்றார். அவரை தயார் படுத்தி நிறைய பேய்படங்கள் பார்க்க வைத்தோம். பின் அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விசயம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை.

இயக்குநராக முதல் நாளிலேயே என்னை 10 டேக் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக்கொண்டேன். அவருக்கு திருப்தி வரும் வரை அவர் மீண்டும் மீண்டும் எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக்கொண்டேன் என்று சொல்வார் ஆனால் நடிகராக அவரிடம் நான் கற்றுக் கொண்டேன். இந்தப்படம் புதிதான பேய் படமாக இருக்கும்.

டீஸரில் வெளிவந்த லிப் லாக் முத்தக் காட்சி பற்றி எல்லோரும் கேட்கிறார்கள் கதைக்கு மிகவும் அவசியம் என்பதால் அந்த காட்சி இடம்பெற்றுள்ளது. என் படத்தில் நிறைய முத்தக்காட்சிகள் வைத்துள்ளேன் நான் நடித்திருப்பது இதுதான் முதல் முறை. மிகவும் தயக்கமாகத்தான் இருந்தது, தவிர்த்து விடலாமே என்று இயக்குனரிடம் சொன்னேன் அவர் அதை ஏற்கவில்லை. ஏகப்பட்ட டேக்குகளுக்கு பிறகுதான் அந்தக் காட்சி இயக்குனருக்கு திருப்தியை தந்தது. இன்னும் நெருக்கமாக நடிக்கத்தான் அவர் விரும்பினார் ஆனால் நான் மறுத்து விட்டேன். என்றார்.

Sharing is caring!