லைலா…மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா?

வாரணம் ஆயிரம், காக்க காக்க போன்ற ஹிட் படங்கள் கொடுத்த சூர்யா-கவுதம் மேனன் கூட்டணி, பல வருடங்களுக்கு முன்பு துருவ நட்சத்திரம் தொடர்பான பிரச்சனையில் பிரிந்தது.

அவர்கள் மீண்டும் எப்போது இணைவார்கள் என்பது பற்றித்தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். அது தற்போது நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவும் தகவல் உண்மையென்றால் சூர்யா-கவுதம் மேனன் கூட்டணி விரைவில் ஒரு படத்தில் இணையவுள்ளனர். அதை கலைப்புலி தாணு தயாரிப்பார் என்று கூறப்படுகிறது.

அது காக்க காக்க பாத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை நாம் காத்திருக்க தான் வேண்டும்.

Sharing is caring!