லொக்கேஷன் பார்க்க கலிபோர்னியா பறந்த இயக்குனர் அட்லீ

சென்னை:
கலிபோர்னியாவுக்கு சென்றுள்ளார் இயக்குனர் அட்லீ. அங்கு படத்திற்கான லொக்கேஷன் பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க உள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு சிறு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் வேலைகளில் படப்பிடிப்பிற்கான லொக்கேஷன் பார்க்கும் வேலைகள் தற்சமயம் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தான் இதன் ஒரு பகுதியாக இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் GKவிஷ்ணுவுடன், அர்ச்சனா கல்பாத்தி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து அவர்கள் எடுத்து கொண்ட போட்டோவை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!