வசந்த பாலன் படத்தில் இணைந்து பணியாற்றும் தனுஷ் – ஜி.வி. பிரகாஷ்

சென்னை:
வசந்தபாலன் இயக்கும் ஜெயில் படத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிகர் தனுசும், ஜி.வி. பிரகாசும் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் தனுஷும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் ஜெயில் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர். அடுத்த ஆண்டில் இப்படத்தின்  படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை வசந்தபாலன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!