வசூல் நாயகர்களில் முதன்மையானவர்

பாலிவுட்டின் வசூல் நாயகர்களில் முதன்மையானவர் சல்மான் கான். அவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் நடித்து படம் சுமாராக இருந்தாலே போதும் அவை 100 கோடி வசூலில் இணைந்துவிடுவது உறுதி என்பதால்தான் அவருக்கு இப்படிப்பட்ட ஒரு வரவேற்பு.

சல்மான் கானுக்கு அவருடைய தயாரிப்பாளர்கள் எந்த அளவிற்கு முக்கியத்தவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு தகவல் சரியான உதாரணம். சல்மான் தற்போது ‘பாரத்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சல்மான் வீடு இருக்கும் பாந்த்ரா பகுதியிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மும்பை டிராபிக் நெருக்கடியில் வீட்டிலிருந்து ஸ்டுடியோவுக்கு வந்து போக கடினமாக இருப்பதால் அவரால் சில நாட்கள் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்ய முடியவில்லையாம். அதைப் பற்றித் தயாரிப்பாளிரிடம் கூற உடனே அவர்கள் படப்பிடிப்பு நடக்கும் பிலிம் சிட்டியிலேயே 10000 சதுர அடியில் ஒரு ஜிம்மைத் தயார் செய்து கொடுத்துவிட்டார்களாம். அதனால், வீட்டிற்கே போகாமல் நடித்துக் கொடுத்து வருகிறாராம் சல்மான்.

Sharing is caring!