வடசென்னை படத்தின் 2ம் பாகம் இப்போது இல்லை… வெற்றிமாறன் தகவல்

சென்னை:
வடசென்னை படத்தின் 2ம் பாகம் இப்போது இல்லை என்று தெரிய வந்துள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என வித்தியாசமாக தனக்கே உரிய பாணியில் படம் எடுத்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வடசென்னை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்படத்தை இயக்குவதற்கு முன்பே வடசென்னை மூன்று பாகங்களாக வெளிவரும் என கூறியிருந்தார். ஆனால் முதல் பாகம் வெளிவந்து செம ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 2ம் பாகம் இப்போது எடுகக வில்லையாம்.

அதற்கு முன்பாக ராஜன் வகையறா என்ற வெப் சீரியஸை எடுக்க உள்ளாராம். வடசென்னையில் அமீர் நடித்த ராஜன் கேரக்டரை சிறு வயதில் இருந்து இன்னும் அழுத்தமாக இந்த வெப் சீரியஸில் சொல்ல உள்ளாராம்.

இது முடிந்த பின்பே வடசென்னை-2வை பற்றி யோசிப்பாராம் இயக்குனர் வெற்றி மாறன்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!