வடசென்னை பட வெளியீடு தள்ளிவைப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்க பட்டுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி, சீனு மோகன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஹீரோவின் 30 வருட வாழ்க்கை சொல்லப்படுகிறது.

படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரின் கேரக்டர் பெயரும் வரிசையாக வெளியாகி வந்த நிலையில் இறுதியாக தனுஷின் கேரக்டர் பெயரும் வெளியானது. அன்பு என்ற கேரக்டரில் தனுஷ் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. செப்டம்பர் மாதம் வெளியீடு என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வடசென்னை அக்டோபர் 17-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sharing is caring!