வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை

பிரபல நடிகை வடிவுக்கரசியின் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இளம் வயதிலேயே திரைப்படத்தில் அறிமுகமான வடிவுக்கரசி, ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகின்றார்.

இவரது வீடு சென்னை தி.நகர் – வெங்கட்ராமன் தெருவில் உள்ளது.

இவரது வீடு இருக்கும் அதே பகுதியில் மகளின் வீடும் உள்ளது. கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

நேற்று முன்தினம் (19) அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 பவுன் நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன. நகைகள் 2 இலட்சம் ரூபா மதிப்புடையனவாகும்.

இது குறித்து வடிவுக்கரசியின் சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

Sharing is caring!