வடிவேலுவின் பேய்மாமா போஸ்டர்…..அமோக வரவேற்பு

வைகைப் புயல் வடிவேலுவின் புதிய படமான பேய் மாமா படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

1988ல் வெளிவந்த என் தங்கை கல்யாணி மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் வைகை புயல் வடிவேலு. கிட்டத்தட்ட 30வருடங்களுக்கு மேலாக சினிமா உலகில் தனது தடத்தை பதித்து வருகிறார். மேலும் பல படங்களுக்கான பாடல்களையும்  இயற்றியுள்ளார். வடிவேலு  தனது முதல் பாடலை “என் ராசாவின் மனசுலே” என்ற படத்திற்கு எழுதினார்.  மேலும் நகைச்சுவை மன்னனாக இருந்த இவர் கதாநாயகனாக தன்னை உயர்த்தி கொண்டார். இவரின் நடிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23ம்புலிகேசி படம் மக்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தெனாலிராமன், எலி போன்ற படங்களில் நாயனாக நடித்துள்ளார்.மேலும் இவரின் இம்சைஅரசன் 24ம்புலிகேசி தயாராகி வருகிறது.

இந்நிலையில் வடிவேலு நடிக்கும் பேய் மாமா படத்தினை சக்தி சிதம்பரம் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Sharing is caring!