வடிவேலுவை மிஞ்சிய யோகிபாபு

நகைச்சுவையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் வடிவேலு. நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த போது நாள் கணக்கில் சம்பளம் வாங்கியதை கணக்கில் கொண்டு, கதாநாயகனாக நடிக்க தேவைப்படும் நாட்கள் எண்ணிக்கைக்கு சம்பளம் கேட்கிறார் வடிவேலு.
இதனை கேட்கும் தயாரிப்பாளர் திரும்பி வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்டு வருவதே இல்லை என்கின்றனர்.
ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் வடிவேலு நகைச்சுவையாக நடித்த போது ஒரு நாள் சம்பளம் 8 லட்ச ரூபாய்.
இன்றைய சினிமா வியாபாரத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வெளியிட சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.அதற்குரிய வியாபாரமும், வசூலும் வடிவேல் நடிக்கும் படங்களுக்கு இருக்காது என்பதால் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்கள்
சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டால் படம் தயாரிக்கலாம் எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது எனக்கோ பசியே கிடையாது என கூறுகிறாராம் வடிவேல்.
இதனால் வடிவேல் நாயகனாக நடிக்க திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தர்ம பிரபு படத்தின் மூலம் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்திருக்கும் யோகி பாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
தர்மபிரபு படத்தின் உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கடும் போட்டியும் ஒரு காரணம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Sharing is caring!