வட சென்னை 2 பாகங்களாக வெளியிட வெற்றிமாறன் திட்டம்

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை கடந்த வருடம் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற வட சென்னை படத்தை, 2 பாகங்களாக வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டிருந்தார்.

அதற்கு முன்னதாக தனுஷை வைத்து மற்றொரு படத்தை இயக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இறங்கினார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அசுரன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடந்த மாதம் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்தனர். ஆனாலும் சில மாதங்களுக்குப் பிறகே அசுரன் படத்தை தொடங்க இருந்தனர். அதற்கு முன்னதாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். ஜனவரி 20 முதல் அந்தப்படத்தில் நடிக்க இருந்தார்.

விஸ்வாசம் ரிலீஸ் பிசியில் இருப்பதால் 1 மாதம் கழித்து படத்தை தொடங்கலாம் என்று சொன்னது சத்யஜோதி பிலிம்ஸ். அதனால் தனுஷ் அவர்களுக்கு கொடுத்த கால்ஷீட்டை வெற்றி மாறன் படத்துக்குக் கொடுத்துவிட்டார். இதன் காரணமாகவே இம்மாதம் 26-ம் தேதி முதல் அசுரன் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Sharing is caring!