வதந்திகளை பரப்பாதீர்கள் : பாடகி எஸ் ஜானகி வேண்டுகோள்

பாடகி எஸ் ஜானகி தாம் நலமாக உள்ளதாகவும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவ்ம் தெரிவித்துள்ளார்.இசை உலகின் புகழ் பெற்ற மூத்த பாடகிகளில் எஸ். ஜானகியும் ஒருவர். இவருடைய ரசிகர்களால் அன்புடன் ஜானகி அம்மா என அழைக்கப்படும் இவர் பல மொழிகளிலும் பாடிப் புகழ் பெற்றவர்.

சிங்கார வேலனே தேவா என்னும் பழைய தமிழ் பாடலின் மூலம் புகழ் வரிசைக்கு வந்த இவர் பிறகு இளையராஜாவின் ஆஸ்தான பாடகி என போற்றப்பட்டார்.

முதுமை காரணமாகவும், இளைஞர்களுக்கு வழி விடுவதற்காகவும் தாம் இசை உலகில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் இவர் தெரிவித்தார். அது இவருடைய ரசிகர்களுக்கு மிகவும் துயரத்தை அளித்தது.

அத்துடன் மேலும் துயரம் அளிப்பது போல இவர் மரணம் அடைந்து விட்டதாக கடந்த இரு தினங்களாக பொய்ச் செய்திகள் பரவி வருகிறது.

இது குறித்து எஸ். ஜானகி தாம் நலமாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவுக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது போன்ற வதந்திகளால் தம் ரசிகர்கள் மனத்துயரம் அடைவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

Sharing is caring!