வதந்தி… அது வதந்திதான்… விஜய் சேதுபதி வட்டாரங்கள் சொல்கின்றன

சென்னை:
வதந்தி… வதந்தி… விஜய் சேதுபதி பற்றி வரும் செய்தி வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் திடீரென்று அப்படத்தில் இருந்து விலையதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின.

இதையடுத்து அவரது ரசிகர்கள் இதில் எது உண்மை என்பது தெரியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் விஜய் சேதுபதி மணிரத்னம் படத்திலிருந்து வெளியேறவில்லை. அவர் மணிரத்னம் படத்திலிருந்து வெளியேறிதாக சொல்லப்படும் தகவல் உண்மையல்ல எனவும் அவரது நட்பு வட்டாரங்கள் உறுதி பட தெரிவித்துள்ளன.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க விக்ரம், விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரிடம் 6 மாதம் மணிரத்னம் கால்ஷீட் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மணிரத்னம் படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த செய்திகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!