வதந்தி… இந்தியன் 2 ஷூட்டிங் 18ம் தேதி தொடக்கம்

சென்னை:
வதந்தி… வதந்தி… வரும் 18ம் தேதி முதல் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தை தான் இயக்குனர் ஷங்கர் அடுத்து எடுக்கவுள்ளார். இதில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் சில நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இந்நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அது வதந்தி என கூறிய படக்குழு ஷூட்டிங் துவங்கும் தேதியையும் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் மிக ப்ரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். வரும் 18ம் தேதி முதல் ஷூட்டிங் அங்கு நடக்கவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!