வந்தா ராஜாவாதான் வருவேன்… இதுதான் சிம்புவின் அடுத்த பட டைட்டில்?

சென்னை:
வந்தா ராஜாவாதான் வருவேன்… இதுதான் சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் என்று சொல்லப்படுகிறது.

சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா பட ஹீரோயின் மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் அது என்னவாக இருக்கும் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு ‘வி’-யில் துவங்கும் என்றும், “வந்தா ராஜாவாதான் வருவேன்” என கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!