வந்தா ராஜாவாதான் வருவேன்… சிம்புவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை:
வந்தா ராஜாவாதான் வருவேன் என்று அடுத்த சிம்பு படத்திற்கு டைட்டில் வைச்சு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

சிம்புவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. டோலிவுட்டில் 2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘அட்டாரினிட்டிக்கி தாரேதி’ சூப்பர் ஹிட்டானது.

இதை சுந்தர்.சி தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்சன் தயாரிக்கிறது. இதில் ஆகாஷ் மேகா, கேத்ரின் தெரசா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கு “வந்தா ராஜாவாதான் வருவேன்” என பெயரிடப்பட்டிருக்கிறது. மிரட்டலாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்புவின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!