வந்துட்டார்… வந்துட்டார்… டுவிட்டருக்கு வந்துட்டார் நடிகர் சங்க தலைவர்

சென்னை:
இணைந்துட்டார்… இணைந்துட்டார்… டுவிட்டரில் இணைந்துட்டார் நடிகர் சங்க தலைவர் நாசர்.

நடிகர் சங்கத் தலைவரான நாசர் டுவிட்டரில் கணக்கு தொடங்கியுள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரபலங்கள், தங்களுடைய ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க இந்த சமூக வலைதளங்கள் உதவி செய்கின்றன. அதிலும் குறிப்பாக பேஸ்புக்கைவிட டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தங்களைப் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வரிசையில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவரான நாசரும் இணைந்துள்ளார். இதுவரை அவருக்கென டுவிட்டரில் தனியாகக் கணக்கு இல்லை. அவருடைய மனைவி கமீலா நாசருக்கு டுவிட்டரில் கணக்கு இருந்தது. இந்நிலையில், நாசரும் அதிகாரபூர்வமாக டுவிட்டரில் இணைந்துள்ளார். அவருடைய ட்விட்டர் முகவரி @actornasser.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!