வந்த செய்தி வதந்தி… ஒரு பாட்டுக்கு ஆடலை… நடிகை அதா சர்மா மறுப்பு

சென்னை:
எந்த ஒரு படத்திலும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடவில்லை. அதிக சம்பளமும் பெறவில்லை. அந்த செய்தி வதந்தி என்று நடிகை அதா சர்மா தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்த, ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்த அதா சர்மா, சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் நானி நடிக்கும் புதிய படமொன்றில் அதா சர்மா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட உள்ளதாக தகவல் வெளியானது.

முதலில் இந்த தகவலை கண்டுகொள்ளாத அதா சர்மா அதிக சம்பளத்துக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடுவதாக அடுத்தடுத்து செய்திகள் வந்ததால் பதில் அளித்துள்ளார். ‘ரசிகர்களே, என்னைப் பற்றி வரும் தகவலில் உண்மை இல்லை. நம்பாதீங்க. இதுபோன்ற தவறான தகவல்களை நான் கண்டுகொள்வதில்லை. அது தன்னால் அடங்கிவிடும் என்று விட்டுவிடுவேன்.

ஆனால் தற்போது தொடர்ச்சியாக இதுபற்றி எனக்கு செய்தி வந்துகொண்டே இருப்பதால் அதற்கு விளக்கம் அளிக்க எண்ணினேன். தற்போது எந்த ஒரு படத்திற்கும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடவில்லை. அதிக சம்பளமும் பெறவில்லை. அதுபோல் உண்மையில் நடந்தால் நானே எனது அதிகாரபூர்வ வலை பக்கத்தில் பகிர்வேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!