வரலட்சுமி ரியாலிட்டி ஷோ நடத்தப்போகிறார்

சர்கார், சண்டக்கோழி-2, மாரி-2 படங்களைத் தொடர்ந்து காட்டேரி, நீயா-2, வெல்வெட் நகரம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி. சின்னத்திரையில் உன்னை அறிந்தால் என்ற பெயரில் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் நடத்தப்போகிறார்.

இந்நிலையில், வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் சமூகவலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் வரலட்சுமி மறுத்துள்ளார்.

டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : “எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. வேலையில்லாதவர்கள் தான் இப்படி எந்தவிதமான ஆதாராமில்லாத தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் என்னை கீழிறக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அது முடியாது. நான் இங்கு வேலை பார்க்கவும், நடிக்கவும் தான் இருக்கிறார். எனது கடின உழைப்பு தோல்வியடையாது,” என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring!