“வருது… புது பாடல்… ஆங்கிலப்புத்தாண்டுக்கு வருது”

சென்னை:
ஆங்கிலப் புத்தாண்டுக்காக புதிய பாடல் ஒன்றை இசையமைத்துள்ளாராம் அனிருத். இதை அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக பொங்கலுக்கு பேட்ட படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் முதன்முதலாக ரஜினியின் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே பயங்கர ஹிட் அடித்தன. இதனால் குஷியாக இருக்கும் ரசிக்ர்களுக்கு மற்றொரு விருந்தை படைக்க இருக்கிறார், அனிருத். வரும் ஆங்கில புத்தாண்டிற்கென அவரது இசையில் புதியதாக ஒரு பாடல் வெளியாக உள்ளதாம்.

இந்த தகவலை அனிருத்தே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!