வரும் 9ம் தேதி ரஜினியின் பேட்ட படத்தின் ஆடியோ ரிலீஸ்

சென்னை:
வரும் 9ம் தேதி ரஜினியின் பேட்ட படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடக்கிறது.

ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 9ம் தேதி நடைபெற இருக்கிறது.

ரஜினி நடித்துள்ள மெகா பட்ஜெட் படமான 2.0 சமீபத்தில் ரிலீசாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அவரது அடுத்த படமான பேட்ட படம் பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பேட்ட ஆடியோ ரிலிஸ் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. முதன்முதலாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் இன்று 3ம் தேதி வெளியாகிறது.

இதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனிருத்தோடு இணைந்து பாடியுள்ளார். பாடலாசியர் விவேக் பாடலை எழுதியுள்ளார். இதையடுத்து 7ம் தேதி இரண்டாவது சிங்கிள் பாடலும் 9ம் தேதி படத்தின் மற்ற பாடல்கள் வெளியீடும் நடைபெற இருக்கிறது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!