வர்மக் கலை பயிலும் காஜல் அகர்வால்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க, ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்தியன் படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளிவந்தது. 22 ஆண்டுகள் கழித்து ஷங்கர், கமல்ஹாசன் மீண்டும் இணைகிறார்கள். ‘எந்திரன்’ படத்தில் கூட கமல்ஹாசன் தான் நடிக்க வேண்டியது. ஆனால், வேறு சில காரணங்களால் அந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடித்தார்.

கமல்ஹாசனுடன் முதல் முறையாக ஜோடி சேர உள்ள காஜல் அகர்வால் இந்தப் படத்தின் வாய்ப்பை பெரிய வாய்ப்பாக கருதுகிறார். அதற்காக அவர் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். வர்மக் கலையை அவர் பயின்று வருவதாக செய்தி வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்திற்காக களரி சண்டைக் கலையை அவர் கற்கப் போகிறாராம். அந்தக் கலை பற்றிய புத்தகங்களை தற்போது படிக்க ஆரம்பித்துள்ள காஜல், விரைவில் அதற்கான முறையான பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்.

Sharing is caring!