வர்மா படத்தை இயக்குவது யார்? புதிய தகவல்கள்

சென்னை:
மீண்டும் படமாக்கப்படும் வர்மா படத்தை தெலுங்கில் இயக்கிய சந்தீப் ரெட்டியை வைத்தே இயக்க தயாரிப்பாளர் நினைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முதல் படம் வர்மா-வை இயக்குனர் பாலா இயக்கி முடித்தபிறகு, அது சரியில்லை என கூறி தயாரிப்பாளர் அதை ட்ராப் செய்துவிட்டு புதிதாக ஷூட்டிங் நடத்தப்போவதாக அறிவித்தார்.

அதை கவுதம் மேனன் தான் இயக்குவார் என சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை, வர்மா படத்தினை அர்ஜுன் ரெட்டி தெலுங்கில் எடுத்த சந்தீப் ரெட்டியை வைத்தே எடுக்க தயாரிப்பாளர் நினைக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

மேலும் அவர் தற்போது அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக் ‘கபீர் சிங்’ படத்தில் பிசியாக இருக்கிறார். இதனால் அவரின் உதவி இயக்குனர் கிரிசாயா என்பவர் இயக்குகிறார் எனவும் கூறப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!