வர்றார்… தனுஷ் படத்தில் விஜய் வர்றார்…!

சென்னை:
தனுஷ் படத்தில் விஜய் வந்தால் எப்படி இருக்கும்… அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை. வரும் 18ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் வட சென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கையை அப்படியே வெற்றிமாறன் காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்களையும் தாண்டி பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் The Life in VADACHENNAI என்ற வீடியோ வெளியாகியிருந்தது.

வடசென்னையின் மொத்த கதையையும் சொல்லும் இந்த வீடியோவில் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் பெயர் பலகை காட்டப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!