வர்றார்… நடிகர் சூர்யாவின் மகனும் சினிமாவில் நடிக்க வர்றார்!!!

சென்னை:
நடிகர் சூர்யாவின் மகன் தேவ் சினிமாவில் நடிக்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

செல்வராகவனின் என்ஜிகே படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில் இவரது மகன் தேவ்விற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

அறிமுக இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தேவ்வை அழைத்துள்ளனர். அந்த படத்தின் கதையை கேட்டறிந்த சூர்யாவிற்கு பிடித்துவிட்டதாம். தேவ்விற்கும் நடிக்கும் ஆர்வம் இருந்ததால் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

சூர்யாவின் அப்பா சிவகுமாரில் இருந்து தற்போது மூன்றாவது தலைமுறையாக சூர்யாவின் மகன் சினிமாவுக்கு வருகிறார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!